Thursday 29 September 2011

ஒரு வேண்டுகோள்

நம் சமூகத்தை ஒன்றிணைக்க எத்தனை நீதிக்கதைகள் வேண்டுமானாலும் சொல்லலாம்.ஒற்றுமைதான் மிக அற்புதமான விஷயம்.இந்த உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஒற்றுமையினால் உருவானவைதான்

  1. பிரஞ்சுப்புரட்சி
  2. ரஷ்யாவில் ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகம்
  3. மாவோவின் சீனப்புரட்சி
  4. இந்தியாவின் விடுதலைபோராட்டம்
  5. தென் ஆப்ரிக்க நிறவெறிக்கெதிரான போராட்டங்கள்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கருத்தியல் முறண்பாடுகள் பகையாகி,தனித்தனியே சென்று போராடும்போது,
ஒரு போராட்டம் வலுவிலக்கிறது.Target திசை மாறுகிறது.இதற்கு நம் கண் முன்னே நடந்த ஒரு தோல்வி - ஈழப்போராட்டம்.

ஈழப்போராட்டத்தின் தற்போதய பின்னடைவை தேவேந்திர குலம் கணக்கில் எடுக்காமல் விட்டேத்தியாக அலையுமானால்,இருந்த இடம் தெரியாமல் நாசமாய் போவது உறுதி.தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு,மள்ளராய் பிறந்த ஒவ்வொருவரும்,ஒற்றுமையாக செயலாற்றி,ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தால்,நாளை மற்ற சமூகங்களுக்கு முன்னுதாரனமாக நம் சமூகம் இருக்கும்..இல்லையேல்...ஈழத்தில் இப்போது நடக்கும் கொடுமையெல்லாம் நமக்கும் நடக்கும்..

அப்புறம், மாவீரன் சுந்தரலிங்கத்தின் பேரன்களுக்கு ஒரு முக்கியமான செய்தி :  
வன்முறையை கையில் எடுத்த உலகின் எல்லா போராட்டங்களும் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது.

இப்போது விஷயத்திற்கு வருவோம்..

பரமக்குடியில் ஆதிக்க சாதி வெறியில்,கொழுப்பெடுத்த போலீஸ்,துப்பாக்கியால் சுட்டும்,அடித்தும் 7 பேரை கொன்றிருக்கிறது.இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும்,பொருக்கி போலீஸ்சை டிஸ்மிஸ் செய்து கூண்டில் ஏற்றும் பல போராட்டங்களின் ஒரு விதமாக

change.org என்கிற தளத்தில் உள்ள பெட்டிஷன் பகுதியில் தங்கள் ஆதரவை தெரிவிக்கவும்.

http://www.change.org/petitions/dismiss-and-convict-police-who-executed-paramakkudi-massacre


இதை நீங்கள் ஆதரித்ததோடு நில்லாமல்,ஒவ்வொருவரும் குறைந்தது ஆயிரம் பேருக்காவது அனுப்புங்கள்.முக்கியமாக ஆதிக்க சாதி வெறியர்களுக்கு இது தெரியட்டும்.சொல்ல முடியும்,வேண்ட முடியும்
உங்களுக்கு உத்தரவெல்லாம் இல்லை.உங்கள் விருப்பம்.

ஏனென்றால் ஒரு சமூகம் எழுச்சி பெற ஒவ்வொருவரின் தன்னெழுச்சியும்,உணர்வும் முக்கியம்.


http://www.change.org/petitions/dismiss-and-convict-police-who-executed-paramakkudi-massacre






No comments:

Post a Comment