Wednesday 28 September 2011

இன்னொரு நீதிக்கதை

ஒரு காட்டில் மூன்று காளை மாடுகள் நட்புடன் இருந்து வந்தன. இந்த காளை மாடுகளை எப்படியாவது உணவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்த காட்டில் வசித்த சிங்கம் ஆசைப்பட்டது.

அந்த மூன்று மாடுகளும் ஒற்றுமையாக இருந்ததால் அந்த சிங்கம் நினைத்தது நிறைவேறவில்லை.

இதனை அறிந்த தந்திரக்கார நரி ஒன்று காளைகளை பிரிக்க முடிவு செய்து தனது விளையாட்டை தொடங்கியது.

தனித்தனியாக ஒவ்வொரு காளையிடமும் சென்று இல்லாததும் பொல்லததும் சொல்லி மாடுகளிடையே சண்டை மூட்டியது.

சில தினங்களிலேயே நரியும், சிங்கமும் எதிர்பார்த்தது நடந்தது. காளைகள் தனித்தனியே திசைக்கொன்றாக பிரிந்து இரை தேடச் சென்றன.

இதுதான் தக்க தருணம் என்று காத்திருந்த சிங்கம் காளைகளை அடித்துக் கொன்று தின்றது.

நீதி  :
இதுதான் நட்பை கெடுத்து பகை உண்டாக்கி அழிப்பது. ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை இந்த மித்ர பேதம் தொடரத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment